நந்தீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம், செப். 24: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சிவலிங்கத்திற்கும் நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நந்தீஸ்வர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தம்பதியர்களாக கோயில் உள் பிரகாரம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமார், ஹரி குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோல் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோயில் மற்றும் திருக்கண்டேஸ்வரம் நடனப் பாதேஸ்வரர் கோயில், வாழப்பட்டு விரித்திகிரீஸ்வரர் கோயில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில், வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: