ரத்னா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பண்ருட்டி, செப். 24: பண்ருட்டி அருகே பேர்பெரியன் குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் பண்ருட்டி ரத்னா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.  

தொடர் ஓட்டம் லஷ்மி பிரியா, சாருமதி, கீர்த்தனா, தர்சினி ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்றனர். 1500 மீட்டர் பிரிவில் கவியரசு இரண்டாம் இடமும், 400 மீட்டர் பிரிவில் மதன் விஷ்வராஜ் முதலிடமும், தத்திதாவு திலில் ஹரிநாத் முதல் இடம், மதன் விஷ்வராஜ் இரண்டாம் இடம், 400 மீட்டர் தத்திதாவுதலில் முகிலன் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் சச்சின் முதல் இடம்.

 இறகு பந்து இரட்டையர் பிரிவில் வசந்தம், மீனாட்சி முதலிடம் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் நீளத்தில் ஹரிநாத், உயரம் தாண்டுதல் போட்டிகளில் முறையே ஹரிநாத் முதல் இடம், கவியரசு இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதி பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி பயிற்சியாளர்கள் கலைவாணன், தினேஷ்குமார் ஆகியோரை பள்ளி ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: