மூடப்பட்ட அரசு மகளிர் விடுதியில் பல லட்சம் மதிப்புள்ள மின் சாதனம் திருட்டு: 3 பேர் கைது

சென்னை: சாலிகிராமத்தில் மூடப்பட்ட அரசு மகளிர் விடுதியில் இருந்து மின்சாதன பொருட்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் அரசு மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி கொரோனா காலத்திற்கு பிறகு மூடப்பட்டது. இங்குள்ள 93 மின் விசிறிகள், இரும்பு குழாய்கள், காப்பர் வயர்கள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மங்கையர்கரசி,

மின்வாரிய உதவி பொறியாளர் கிரவுன் லூதர் புகார் அளித்தனர். அதன்பேரில், அரசு விடுதி அமைந்துள்ள காந்தி நகரில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (36), கஞ்சய்குமார் (26), ராம்குமார் (2) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: