ஐசிஎப்பை தனியார்மயமாக்க எதிர்ப்பு: தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ஐசிஎப்பை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப்பை தனியார்மையம் ஆக்கக்கூடாது, வந்தே பாரத் 18  ரயில் பராமரிப்பு பணிகளை தனியார் மயமாக்க கூடாது, 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ரயில்வே துறையை சிறிது சிறிதாக தனியார் மயமாக்கி வருவதை நிறுத்தி பொது நிறுவனங்களை ஒன்றிய அரசு அபகரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு -ஏஆர்எஸ் தொழிற்சங்கம் சார்பில் நேற்று பெரம்பூர் ஐசிஎப் பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், திமுக என்எப்ஐ ஆர்சிஐடியு.ஜாக். அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: