புதுப்பாளையம் துவக்க பள்ளியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம், செப். 23: புதுப்பாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் -கற்பித்தல் திறன் குறித்து கலெக்டர் ஆர்த்தி  ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசு சார்பில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவினை  காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சுவைத்து அதன் தரத்தினை ஆய்வு செய்தனர். பேரிடர் காலம் துவங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டருடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு முழு சுகாதாரம் உறுதி செய்து, தரமான உணவு தயாரிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், கைலாசநாதர் கோயில் துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும்போது அவர்களுடன் உரையாடி உணவு தரம், சுவை குறித்து கேட்டறிந்தார். மேலும் புதுப்பாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் குறித்து கூறச் சொல்லி ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து, தேனம்பாக்கம் அரசு நகர் பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய் தூர் வாரிய பணிகள் மற்றும் ஓரிக்கை புதிய காய்கறி சந்தை கட்டும் பணி துவங்க உள்ள நிலையில், தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் இடங்கள், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி தனியார் பால் உற்பத்தி மையம், பால் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையயிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆவின்போது காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் கனேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: