×

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஸ்மார்ட் கண்ட்ரோல் அறைக்கு ₹22 லட்சம் மதிப்புள்ள 18 மானிடரிங் டிவி எஸ்பி ஆய்வு


வேலூர், செப்.23: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஸ்மார்ட் கண்ட்ரோல் அறைக்கு ₹22 லட்சம் மதிப்புள்ள 18 மானிடரிங் டிவி வாங்கப்பட்டுள்ளது. அதனை எஸ்பி ராஜேஷ்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழகம்- ஆந்திர மாநில எல்லையில் வேலூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா, செம்மரம் உள்ளிட்டவை வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள 4 சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் நேரடியாக எஸ்பி அலுவலகத்தில் இணைக்கப்பட்டு எஸ்பியினி நேரடி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேேபால் மாவட்டம் முழுவதும பேஸ் ரெகக்னைஸ் கேமரா வைக்கப்பட உள்ளது.

மேலும் சிசிடிவி, கேமரா, டயல் 100 உள்ளிட்டவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் விதமாக ஸ்மார்ட் கண்ட்ரோல் அறை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் வகையில், நேற்று ₹22 லட்சம் மதிப்புள்ள 18 மானிடரிங் டிவி வாங்கப்பட்டது. அதனை எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார். அதன் திறன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, இன்ஸ்பெக்டர் முரளி, தொழில்நுட்ப பிரிவு போலீசார் உட்பட பலர் இருந்தனர்.

Tags : Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...