(தி.மலை) சூப்பர் மார்க்கெட் ஊழியர் கைது வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு தொல்லை

செய்யாறு, செப்.23: செய்யாறு அருகே கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தொல்லை கொடுத்த சூப்பர் மார்க்கெட் ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். செய்யாறு அடுத்த மதுரை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(34). செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். மாணவி தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது, கன்னியப்பன் அவரை வழிமறித்து கிண்டல் செய்து வந்தாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் வீட்டிற்கு சென்ற கன்னியப்பன் அவரது கையை பிடித்து இழுத்து, ‘வா திருமணம் செய்து கொள்ளலாம்’ என கூறினாராம். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், `உன்னையும், உனது குடும்பத்தினரையும் தீர்த்து கட்டிவிடுவேன்' என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையறிந்த மாணவியின் பெற்றோர் அனக்காவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப் பதிவு செய்து, மார்க்கெட் ஊழியர் கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகிறார். கைது செய்யப்பட்ட கன்னியப்பனுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

Related Stories: