×

சட்ட விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை, செப்.23: தேவகோட்டை அருகே சருகணி இதயா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டக் குழுவினரின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதிமேரி முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி கலந்து கொண்டு பெண்களுக்கான சட்டங்களை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தார். திருவேகம்பத்தூர் அரசு டாக்டர் செல்வகுமார் மன அழுத்தம் குறித்தும், மாணவிகள் மனஅழுத்தத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Legal Awareness Camp ,
× RELATED மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களின்...