கூடுதல் வட்டி தருவதாக பல லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிதி நிறுவனத்தை முற்றுகை

பெரம்பூர், செப்.23: பெரம்பூர் பாரதி சாலையில் கடந்த 1961ம் ஆண்டு முதல் தி.பரஸ்பர சகாய நிதி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, வயதானவர்கள், இளம்பெண்கள் மற்றும்  பென்ஷன் வாங்கும் நபர்கள் என பலரும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30  லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை  வட்டி தரப்படும் என்று நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன்படி பணம் செலுத்தியவர்களுக்கு, வட்டி தொகை தரப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதுபற்றி கேட்டபோது, நிதி நிறுவனத்தினர் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், அடிக்கடி வந்து நிதி நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.இந்தநிலையில், நேற்று காலை 300 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் நிதி நிறுவன அலுவலகத்தின் உள்ளே சென்று அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் கட்டிய பணம் கொடுத்தால் தான் செல்வோம்’’ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 300க்கும் மேற்பட்டோருக்கு நிதி நிறுவனம் சார்பில் பணம் வழங்கப்படும் என்று டோக்கன் கொடுக்கப்பட்டது.  டோக்கன் கொடுத்தவர்களுக்கு இன்று பணம் வழங்கப்படும். மீதம் உள்ளவர்களுக்கு பிறகு பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், இளம்பெண்கள் மற்றும் பென்ஷன் வாங்கும் நபர்கள் என பலரும் தங்களது பணத்தை 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு பணம் டெபாசிட் செய்தவர்கள், வட்டி தொகையை கேட்டபோது, உடனடியாக பணம் தர முடியாது என்று நிதி நிறுவனத்தினர் கூறுகின்றனர். அசல் தொகையையும் திருப்பி தர மறுக்கின்றனர். எனவே, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும், என்றனர்.இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் செயல்பட்டுவரும் இந்த நிதி நிறுவனம் பண மோசடியில் சிக்கி இதுசம்பந்தமான வழக்கு மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: