×

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை படிப்பிற்கு செப்.26ல் கலந்தாய்வு

பரமக்குடி, செப்.23: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடத்திற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த செப்.7 ம் தேதி முதல் தொடங்கி செப்.16 வரை ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் பரமக்குடி கலைக் கல்லூரியில் முதுகலைப் படிப்பிற்கான எம்.காம், எம்பிஏ.,எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், வதியியல், மின்னணுவியல் ஆகிய படப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு வரும் செப்.26ம் தேதி தொடங்குகிறது. காலை 9 மணி முதல் 10.30 வரை சிறப்பு பிரிவினருக்கும், காலை 10.30 மணிக்கு மேல் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். மேலும், முதல் கலந்தாய்வுக்கு பின் உள்ள காலி பணியிடங்களுக்கு மறுநாள் 27ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். அன்று ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்கள் நேரில் கல்லூரிக்கு வந்து விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Govt Arts College ,Paramakkudy ,
× RELATED செய்யாறில் உள்ள அரசு கலைக்கல்லூரி...