×

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ராமநாதபுரம், செப்.23: மண்டபம் முகாம் அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவ, மாணவியர் 92 பேருக்கு தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ராஜா வழங்கினார். தலைமை ஆசிரியர் உலகநாதன், பள்ளி புரவலர் சரவணன், உடற்கல்வி இயக்குநர் கண்ணதாசன், கவுன்சிலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் கீழக்கரை முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர்ஜான் பீவி வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...