கால்நடைகளுக்கு மலடுநீக்க முகாம்

மல்லசமுத்திரம், செப்.23: மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமம், கொசவம்பாளையத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள், கன்றுகள் ஆடுகளுக்கு வழங்கப்பட்ட குடற்புழு நீக்க மருந்துகள், கருவூட்டல், நோய் மேலாண்மை பற்றி சிறப்பு வல்லுநர்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில் மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி முகமை அதிகாரிகள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில், உலக வங்கி ஆய்வு குழுவினர் பர்போத் யுசோபி, ராமசுப்பிரமணியன் குழுவினர் முகாமை பார்வையிட்டு மருத்துவர்களை பாராட்டினர்.

Related Stories: