நெல் நடவு பணிகள் மும்முரம்

இடைப்பாடி, செப். 23: இடைப்பாடி சுற்றியுள்ள வெள்ளூற்றுப்பெருமாள் கோயில், மயிலாடி திம்மராய பெருமாள் கோயில், புட்டமனை குஞ்சாம்பாளையம், மூலப்பாதை, தண்ணீர்தாசனூர், புள்ளம்பட்டி, குள்ளம்பட்டி, செட்டிபட்டி, காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்கரகாரம் ஊராட்சிக்குட்பட்ட கல்வடங்கம், பூமணியூர், மேட்டுப்பாளையம், கொங்கணாபுரம் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பில்லுக்குறிச்சி, காசிக்காடு சுற்றியுள்ள பகுதி விவசாயிகள், சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் காவிரியில் உபரிநீர் திறப்பு ஆகியவற்றால், விவசாயிகள் நெல் நடவு பணிகளை முடுக்கி விட்டிருந்தனர். பல கிராமங்களில் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் வயல்கள் அனைத்தும் பச்சை பசேலென காணப்படுகிறது.

Related Stories: