ரூ.1.88 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது

சேலம், செப்.23: சேலம் சங்கர் நகரில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்தவர் ரவிக்குமார். இவர் கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர். இவரது மனைவி கந்தலட்சுமி, தம்பி மணிகண்டன், குருதர்மன், பாலமணிகண்டன்(32) ஆகிய 5 பேரும் சேர்ந்து நகை கடையை நடத்தினர். இங்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் ஒரு மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வட்டி தருவதாக கூறி நூதன முறையில் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நகை கடையில் முதலீடு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு பணத்தை வாங்கிக்கொண்டு கடையை மூடிவிட்டு 5பேரும் தலைமறைவாகினர்.

இதில், பாதிக்கப்பட்ட 11 பேர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் தங்களிடம் ரூ.1கோடியே 88லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து கந்தலட்சுமி, குருதர்மன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவிக்குமார் மற்றும் பாலமணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே அமானிகொண்டலாம்பட்டியை சேர்ந்த பாலமணிகண்டனை(35) மத்திய குற்றப்பிரிவின் உதவி கமிஷனர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடிவருகின்றனர்.

Related Stories: