பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஈரோடு, செப். 23: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2வது செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. நசியனூர் சாலையில் உள்ள கூட்டமைப்பின் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.கே.பாலுசாமி பங்கேற்று பேசினார். கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவநேசன், ஜெகதீசன், தேவராஜா உள்ளிட்ட பலர் கெளரவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில், அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும். தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12 சதவீதம் வட்டியை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவன செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி செலுத்தும்போது சலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் ஒப்பமிட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, முகவர்கள் ஒப்பமிட்டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணைச் செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார். ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 6 ஆயிரம் குடியிருப்புகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

Related Stories: