லாரியில் கஞ்சா கடத்தி வந்த டிரைவர் கைது

சோமனூர், செப்.23: கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லையில் அடிக்கடி கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு எஸ்ஐ ராஜேஷ் கண்ணா மற்றும் ஏட்டு கோபிநாத், வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பீகாரத்தைச் சேர்ந்த சந்தன்குமார்(20) என்பதும், ஒரிசாவில் இருந்து லாரியில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தும் தெரிய வந்தது. இதையடுத்து சந்தன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: