அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி,செப்.23:நீலகிரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனை குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்த பட்சம் 3 வருட அனுபவமும், முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை வரும் 29ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகம், பிங்கர்போஸ்ட், ஊட்டி, நீலகிரி மாவட்டம் 643006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-2443392 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: