பண்டு சீட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்

திருப்பூர், செப். 23: நல்லூர் பகுதியியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நல்லூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் கடந்த 6 வருடங்களாக பணியாற்றும் பாண்டு என்பவரிடம் தீபாவளி பண்டு சீட்டு பணம் செலுத்தி வருகிறோம். கடந்த 5 வருடங்களாக நாங்கள் கட்டிய பணத்தை தீபாவளிக்கு முன்பு அனைவருக்கும் பிரித்து கொடுத்து விடுவார்.

ஆனால் இந்த ஆண்டு தனது அண்ணன் மகளுக்கு திருமணம் எனக் கூறிவிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஊருக்கு சென்று விட்டார். ஊருக்கு சென்றவர் இன்று வரையில் திரும்பவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள அவரின் சொந்த வீட்டிற்கு சென்று பார்த்தோம். நாங்கள் வருவதை அறிந்த பாண்டு வீட்டை பூட்டி சென்று விட்டார். எனவே அவரை கண்டுபிடித்து நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: