பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,செப்.23:தமிழகத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை என்ற பெயரில் நடைபெறும் அடக்கு முறையை கண்டித்து திருப்பூரில் சிடிசி மற்றும் புஸ்பா தியேட்டர் பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் பஷீர் அகமது, அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் யாசர், சாஹின்பாக் கூட்டமைப்பு நிர்வாகி யூசுப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் அப்துல் கலாம், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் அஸ்லாம், திராவிட விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில் ராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசிற்கு எதிராகவும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை பெயரில் நடைபெறும் அடக்கு முறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 56 ேபரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: