தாராபுரம் அருகே 11.63 ஏக்கர் கோயில் நிலம் ஒப்படைப்பு

தாராபுரம், செப்.23: தாராபுரம் அடுத்த உப்பாறு அணை செல்லும் சாலையில் கெத்தல்ரேவ் கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 11.63 ஏக்கர் புன்செய் நிலம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திருப்பூர் இணை ஆணையரின் உத்தரவின்படி ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த கோயில் நிலத்தை மீண்டும் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்ததனர்.

அதன் அடிப்படையில் நேற்று திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வர் ஆதிரை, செயல் அலுவலர், சுந்தரவடிவேல், சதீஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சுமார் ஒரு கோடி  மதிப்பிலான நிலம் சுவாதீனம் பெறப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Related Stories: