துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு

காங்கயம், செப். 23: காங்கயம் தாலுகா, வடசின்னாரிபாளையம் ஊராட்சி, காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் கருணாகரன் அலுவலர் கருணாகரன், கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் கூறியதாவது: தமிழக முதலவர் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னங்காளி வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வீணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு காலை உணவுத் திட்ட செயலினை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசின் திட்டங்களை காலதாமதமின்றி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து  குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிமென்ட் இருப்பறை, வட்டார ஊராட்சி  சேவை மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் பின்னர்  தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகள் மற்றும்  தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற  புகைப்படம் எடுக்கும் இடம், கணினி முறையில் பதிவேற்றம், அலுவலக பதிவேடுகள்,  ஓட்டுநர் உரிமம் வழங்கும் பதிவேடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அரசின்  திட்டங்களை காலதாமதமின்றி விரைவாக செயல்படுத்த அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், தாராபுரம்  கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)  சிவசண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: