பெல், நவல்பட்டில் இன்ஸ்பெக்டர்கள் பதவியேற்பு

திருவெறும்பூர்,செப்.23: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மற்றும் பெல் போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த வெற்றிவேல், தஞ்சை மாவட்ட சரகத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் பெல் இன்ஸ்பெக்டராக இருந்த பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் பெற்றதை தொடர்ந்து பெல் போலீஸ் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக கமலவேணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: