திருச்சி மாவட்ட விவசாயிகள் வெங்காய சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

திருச்சி, செப்.23: திருச்சி மாவட்டத்தில் 2022 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடிக்கு 30.11.2022 வரை விண்ணப்பித்து பிரீமியம் தொகையாக வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2078 அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இப்பயிர் காப்பீடு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், விலாசம், நிலபரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையை செலுத்தி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தரிசனம் முடிந்து மீண்டும் தங்கள் வாகனங்களை எடுக்க கோயில் பஸ் மூலம் கொண்டு விடுவதற்கான ஏற்பாட்டுடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: