புரட்டாசி மாத ஏகாதசி கோம்புபாளையம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம், செப். 23: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாசபெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: