வேளாண்மை, உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கரூர், செப்.23: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்ததாவது: வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு தானிய உற்பத்தி குறித்தும், விதை மற்றும் உரங்கள் இருப்பு குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், பிரதம மந்திரியின் விவசாய கவுரவ நிதி குறித்தும், மாநில வேளாண் அபிவிருத்தி திட்டம் குறித்தும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் குறித்தும், மானாவாரி வேளாண் வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம், ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் பொறியியல் துறையில், நிலம் மேம்பாட்டு பணிகளில் இயந்திரங்கள் பயன்பாடு, சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அமைத்தல், சூரிய கூடார உலர்த்தி, அறுவடைக்கு பின் நேர்த்தி, மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், வேளாண் வணிகம், தமிழ்நாடு தொடர் விநியோகம் மேலாண்மை திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்தல், புதிய உழவர் சந்தை தாந்தோணி வட்டாரம் காந்திகிராமத்தில் அமைத்தல் போன்ற செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலக்கு உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து வேளாண் மக்களுக்கு பயனுள்ளதாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். டிஆர்ஓ  லியாகத், இணை வேளாண்மை இயக்குநர் சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: