சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், செப்.23: 2022ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர்களுக்கு ரூ.5லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான தேர்வாளர்கள் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம், தங்களின் சுய விபரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 2022ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், வாசகர்கள் எதிர்பார்ப்பு அரசியல், சட்டம், மருத்துவம், அறிவியல், வரலாறு, கம்ப்யூட்டர், தேசத் தலைவர்களின் சுயசரிதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், தொழில் முயற்ச்சிக்கான நூல்கள், போட்டி தேர்வுக்கான நூல்கள், ரயில்வே, ஆர்மி, அஞ்சலக, விஏஓ தேர்வுகள், கதை, கவிதை, கட்டுரைகள், ஆன்மீகம், மொழியில், புத்தகங்கள் 37,000 நூல்கள் உள்ளன.

Related Stories: