திருச்சி கல்லுக்குழி ரேஷன் கடையில் அரசு முதன்மை ெசயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருச்சி,செப்.22: தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சி அண்ணா நகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் உள்ளிட்ட 15 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கினார். மேலும் வாகனத்தில் மூலம் நடமாடும் கூட்டுறவு வங்கி சேவை செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து திருச்சி கல்லுக்குழி ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஆய்வு செய்து அங்குள்ள ஊழியர்கள், பணியாளா்களிடம் கிடங்கின் செயல்பாடுகள் குறித்தும், அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளா்களின் தேவை குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் அங்கு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மூட்டை தூக்கி வரும் முதியவருக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Related Stories: