மினிலாரியுடன் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம், செப். 23: சேலம் அருகே மினிலாரியுடன் 1.5டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் அருகே கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சந்தைப்பேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மினிலாரியுடன் 1.5டன் ரேஷன் அரிசியை பறிமுதுல் செய்த போலீசார், அரிசியை கடத்தி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில், சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த சிம்சோன்(எ) தினேஷ்(30) என்பதும், கருப்பூர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: