தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமகிரிப்ேபட்ைட, செப்.22: வெண்ணந்தூர் ஒன்றியம் சார்பில், அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்த மக்களுக்கு, சுகாதார தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெண்ணந்தூர் பிடிஓ.,க்கள் பிரபாகரன், மாதையன் ஆகியோர் பேசுகையில், ‘தற்போது மழைக்காலம் நெருங்குவதால், குடிநீரை நன்கு  காய்ச்சி பருக வேண்டும். மேலும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, மஞ்சப்பையால் தயார் செய்யப்பட்ட பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்,’ என்றனர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் பாபு, பழனிவேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: