அதிமுக பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு, செப்.22: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு ரதவீதியில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து தலைமை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பேசினார். நகர அவை தலைவர் பொன்னுசாமி, பேரூராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் மோகன், ராஜன், கொட்டாங்காடு சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், பழ.ராமலிங்கம், சின்னுசாமி, பரணிதரன், செல்லப்பன், கார்த்திகேயன், ராமமூர்த்தி, செந்தாமரை, அருள்செல்வி, ராஜவேல் கல்பனா, கலைமணி, சபரி தங்கவேல், முரளிதரன், ராகவன், ராஜாமைதிலி, காந்தி, மல்லிகா மாரிமுத்து, விஜயபிரியா முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், குலாப் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: