நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு

நாமகிரிப்ேபட்ைட, செப்.22: ராசிபுரம் ஒன்றியம் சார்பில், அரசு குறுக்கபுரம் ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்து, அனைத்து வீடுகளுக்கும் சென்று, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, பாக்கு மட்டை, காகித சுருள், மரம் உள்ளிட்ட மண் மூங்கில் ஆன பொருட்கள் துணிப்பை, காகிதப்பை, சணல் பையை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, விழிப்புணர்வு நோட்டீஸ், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க கூடைகள், மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. பின்னர், நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பிடிஓ.,க்கள் அருளப்பன், பிரியா மற்றும் ராசிபுரம் குறுக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: