ஆசிரியரிடம் ₹2.75 லட்சம் திருடிய இளம்பெண் கைது

ஊத்தங்கரை, செப்.22: ஊத்தங்கரையில் ஆசிரியரிடம் கைவரிசை காட்டி, ₹2.75 லட்சத்தை அபேஸ் செய்த திருப்பத்தூர் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முல்லைநகரை சேர்ந்தவர் ராமலிங்கம், ஆசிரியர். இவர் கடந்த ஜூன் 8ம் தேதி, ஊத்தங்கரையில் உள்ள வங்கி ஒன்றில் ₹2.75 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது டூவீலரில் வைத்து விட்டு ஆடிட்டர் ஆபீசுக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, டூவீலரில் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊத்தங்கரை பகுதிகளில் பெண் ஒருவர் நூதன திருட்டில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த நந்தினி(30) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில், ஊத்தங்கரையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் பணம் வைத்திருக்கும் நபர்களை குறி வைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களிடமிருந்து பணத்தை திருடிச் செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலஅட்வின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நந்தினியை கைது செய்து, அவரிடமிருந்து ₹2 லட்சத்து 75 ஆயிரத்தை மீட்டனர். கைது செய்யப்பட்ட நந்தினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories: