நேரடி மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி, செப்.22:பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-23ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத ஒரு சில இடங்களுக்கும், நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி சேர்க்கை வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. மின்சார பணியாளர் தொழிற்பிரிவு 2 வருட தொழிற்பயிற்சி காலியாக உள்ள 2 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் உள்ளது. கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவியாளர், உணவு தயாரித்தல் (பொது) ஒரு வருட பயிற்சி, அனைத்து பிரிவினருக்கும சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சி முடித்தவுடன் ஓசூரில் உள்ள முன்னனி நிறுவனங்களில் அப்ரண்டிஸ் பயிற்சி சம்பளத்துடன் பெற்றுத்தரப்படும். பயிற்சியின் போதே இன்பிளான்ட் டிரெயினிங் பெற்றுத்தரப்படும்.

மேலும், பயிற்சி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இதர கட்டணங்கள் மட்டும் ₹1175 செலுத்தி சேர்க்கை செய்து கொள்ளலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள் 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம். சேர்க்கை செய்ய, மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள்-2, ஆதார் அட்டை (விண்ணப்பதாரர், விண்ணப்பதாரரின் தாய் மற்றும் தந்தை) 2 நகல்கள் ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை செய்து கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நேரடி சேர்க்கை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். இவ்வாறு பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: