திமுக இளைஞரணி சேர்க்கை முகாம்

ஓசூர், செப்.22: ஓசூர் சமத்துவபுரத்தில் திமுக சார்பில், இல்லம்தோறும் இளைஞரணி சேர்க்கை முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் ராமு, முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மண்டல தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ், நாகேஷ், மாணவரணி ராஜா, செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், சாந்தவீரபத்திரப்பா, திம்மராஜ், சக்திவேல், சுமன், மஞ்சுளா முனிராஜ், மம்தா சந்தோஷ், கிருஷ்ணப்பா, மோகன், ஜெய் ஆனந்த், ஹரிபிரசாத், கார்த்திக், முருகேசன், கலைச்செல்வன், குமார், பாபு, ரவிக்குமார், மனோகரன், முல்லை சேகர், சீனிவாசன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: