மின் அலுவலகத்தில் திருடியவர் கைது

சூளகிரி, செப்.22:சூளகிரி தாலுகா, பேரிகையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு  அதிகாலையில் பணியில் இருந்த ஊழியர்களை அறையில் அடைத்து, பல லட்சம் மதிப்பிலான மின் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக 15 பேரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கெலமங்கலத்தைச் சேர்ந்த முனியய்யா மகன் செல்வராஜ்(21) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: