உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

ஓசூர், செப்.22:வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 பேரின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஓசூர்-பாகலூர் சாலை குடியிருப்பு பகுதியில், 21 தியாகிகளின் உருவ படங்களுக்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், பாமக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜ், மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள்    அன்பழகன், சிவகுமார், பெருமாள், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், விஸ்வநாதன், வெற்றி பிரபு உட்பட பலர் மலர்தூவி, அஞ்சலி செலுத்தினர். இதேபோல், பாமக சார்பில் ஓசூர் பாரதி நகர் பகுதியில் மாவட்ட செயலாளர் அருண்ராஜ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாரதிநகர் குடியிருப்புவாசிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: