கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்

கரூர், செப். 22: கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள துவக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுதும் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை இந்த காய்ச்சல் அதிகம் தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் இதன் தாக்கம் அதிகமான காரணத்தினால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் தற்போது சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று, காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம், சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் இன்புளுயன்சா காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: