பள்ளபட்டி அரசு பள்ளி மாணவருக்கு சான்றிதழ் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு

அரவக்குறிச்சி, செப். 22: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி மாணவர்களிடையே அவர்களின் தமிழ்த்திறனை வளர்க்கும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10,000 இரண்டாம் பரிசு 7000 மூன்றாம் பரிசு 5000 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூபாய் 2000 என பல்வேறு வகையில் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஷிப்ல்ஹூசைன் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர் ஷிப்ல் ஹூசைன் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15ம் நாள் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவர்களுக்கு அண்ணா என்ற தலைப்பில் பேசி முதல் பரிசினையும் வென்றுள்ளார்.

Related Stories: