மது விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

போச்சம்பள்ளி, செப்.22: மத்தூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், மத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ஜி.டி.குப்பம் பகுதியில் மல்லிகா(51) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், மாதம்பதி பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மகேந்திரன்(40) என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: