ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படிரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்க வலியுறுத்தல்

ஊட்டி, செப். 22: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சமி நில மீட்பு குழு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அதன் தலைவர் எமரால்டு சேகர், நீலகிரி எம்பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு பல கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் தாட்கோ கடனுதவி பெற்றவர்களுக்கு கடன்கள் வழங்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கி மேலாளர்களும்,

கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், இயக்குநர்கள் சேர்ந்து தாட்கோ மூலம் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தொழில் செய்து வாழ்வாதாரம் உயரவும், விவசாயம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி ரூ.10 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு தாமதமின்றி வழங்கிட அறிவுத்த வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Related Stories: