ஆட்டோ டிரைவர் கொலை

கோவை, செப்.22: கோவை பீளமேடு எஸ்.டி.வி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (73). சரக்கு ஆட்டோ டிரைவர். சில நாட்களுக்கு முன் இவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.டி.வி நகர் வழியாக கிருஷ்ணகுமார் (50) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். சரக்கு ஆட்டோ கார் பக்க கண்ணாடி மீது மோதியது. இதில் கோபமடைந்த கிருஷ்ணகுமார் வாக்குவாதம் செய்தார். கார் கண்ணாடி உடைந்ததிற்கான பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் சுப்ரமணியம் தர மறுத்து விட்டார்.

அப்போது கிருஷ்ணகுமார் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டார். அப்போது ரோட்டில் விழுந்த சுப்ரமணியத்திற்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சுப்ரமணியம் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பின்னர் சுப்ரமணியத்திற்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். தப்பிய கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: