கொடுமுடியில் போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்திய 3 பேர் தப்பி ஓட்டம்

ஈரோடு, செப். 22: கொடுமுடி பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார்  நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, கொடுமுடி அருகே உள்ள காரணம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 1,700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், கண்ணையன், சதீஷ்குமார் என்பதும், ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி, பெருந்துறை பகுதியில் உள்ள வட மாநிலத்தினருக்கு அதிக விலைக்கு விற்க கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையில், போலீசாரை கண்டவுடன் ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் 1,700 கிலோ ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகிவிட்ட மூவர் மீதும் வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: