×

சொக்காநல்லூர் கிராமம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ₹2 கோடியே 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்,  செப்.22:  பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் வயலா நல்லூர் ஊராட்சி சொக்காநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் இரா. செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் டி.துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன்,  துணை வட்டாட்சியர் தனுஜா டயானா, வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் பாலாஜி, இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பாக 543 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 12 லட்சத்து 910 மதிப்பீட்டில் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அடுத்து  ஒவ்வொரு ஊராக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அச்சுற்றுப்பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற மனுக்களுக்கென ஆட்சிக்கு வந்தவுடன் தனி நிர்வாகம் அமைத்து, மக்களின் தேவைகள் என்னென்ன என கண்டறிந்து, அம்மனுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து அதற்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, பணிகள்  நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய அதில் பெற்ற மனுக்களில் 80 சதவிகிதம் முடித்த பெருமை தமிழக முதல்வரையே சாரும். அந்த அளவுக்கு விளிம்பு நிலையில் உள்ள மக்கள், நடுத்தர மக்கள், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டங்களை தீட்டி முதல்வர் நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழக முதல்வர் தன்னுடைய ஆட்சித் திறமையால், செங்கோல் திறமையால் இந்த ஆட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி சென்று இந்தியாவில் இருக்கின்ற முதல்வருக்கெல்லாம் முதல்வராக திகழ்ந்து கொண்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

 இம்முகாமில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 90 பயனாளிகளுக்கு ₹90 ஆயிரம் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகையாக 8 பயனாளிகளுக்கு ₹8 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையாக 34 நபர்களுக்கு ₹34 ஆயிரம் மதிப்பீட்டிலும், 121 பயனாளிகளு வீட்டுமனைப் பட்டாக்களும், பட்டா மாற்றம் - முழுப்புலம் என 22 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் - உட்பிரிவு என 65 பயனாளிகளுக்கும், கிராம நத்தம் பட்டா நகல் 26 பயனாளிகளுக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும், முதல் திருமண சான்று 2 பயனாளிகளுக்கும், இந்து - இருளர் பழங்குடியினர் சான்று 10  பயனாளிகளுக்கும், சாதிச்சான்று 10 பயனாளிகளுக்கும், ஓபிசி சான்று 4 பயனாளிகளுக்கும், விதவைச் சான்று 23 பயனாளிகளுக்கும், திருமணமாகாதவர் என சான்று  2 பயனாளிகளுக்கும், முதல் பட்டதாரி சான்று 1 பயனாளிக்கும், வாரிசு சான்றுகள் என 6 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு ₹11,160 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், வேளாண்மை துறை பயிர் வகைகள் 5 பயனாளிகளுக்கும், மடக்கு சக்கர நாற்காலி ₹ 69,750 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கும், சலவைப் பெட்டி 1 பயனாளிக்கும், மருந்து தெளிக்கும் கருவிகள் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 543 பயனாளிகளுக்கும ₹2 கோடியே 12 லட்சத்து 910 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தன், எம்.இளையான், புகழேந்தி, பாஸ்கர் சுமதி குமார், பிரபாகரன், பிரகாஷ், எம்.முத்தமிழ்செல்வன், டி.குமரேசன், ராம்பாபு, ராஜாராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் என்.பி.மாரிமுத்து, ஜெய லோகநாதன், பிரியா செல்வம், ஊராட்சி தலைவர்கள் வி.தணிகாசலம், , சி.அண்ணாகுமார், சுகுமார், விஜய்பாபு, பொன்முருகன், துணை தலைவர் எம்.சீனிவாசன், கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணி,  தசரதன், வீரராகவன், கண்ணன், பாலா, பி.சுரேஷ்,  ஆர்.எலேசர், ராமன், சுரேந்தர், முத்து, ரமேஷ், தாமோதரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கொண்டனர். முடிவில் தனி வட்டாட்சியர் சுகந்தி நன்றி கூறினார். இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 90 பயனாளிகளுக்கு ₹90 ஆயிரம் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகையாக 8 பயனாளிகளுக்கு ₹8 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையாக 34 நபர்களுக்கு ₹34 ஆயிரம் மதிப்பீட்டிலும், 121 பயனாளிகளு வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டது.

Tags : Sokkanallur ,Village Popular Relations Project Camp ,Minister ,Awadi Sahah ,b.k ,Nassar ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...