பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் ₹2.37 லட்சத்தில் மீன் பாசி குத்தகை ஏலம்

பள்ளிப்பட்டு, செப்.22: பள்ளிப்பட்டு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி மீன் பாசி குத்தகை ஏலத்தில் பங்கேற்றவர்கள் போட்டோ போட்டியுடன் ஏலத்தொகை உயர்த்தியதால்  ₹2.37 லட்சத்திற்கு மீன் பாசியா குத்தகை ஏலம் விடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொளத்தூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி மீன் பாசி குத்தகை ஏலம் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை பள்ளிப்பட்டு உட்கோட்ட இளநிலை பொறியாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீன் பாசி குத்தகை ஏலத்தில் பங்கேற்றவர்கள்  போட்டா போட்டியுடன் ஏலத் தொகையை உயர்த்தினர். இதனால், கடந்த ஆண்டு  ₹19 ஆயிரத்துக்கு மட்டும் குத்தகை உரிமம் விடப்பட்ட நிலையில். இந்த ஆண்டு ₹2.37 லட்சத்திற்கு கமலநாதன் என்பவர் குத்தகை  உரிமம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின்போது, காவல் ஆய்வாளர் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் நாகபூஷணம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: