ஆந்திராவிற்கு கடத்த வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி, செப். 21: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் உள்ள ஆதவன் அரிசியாலையில் 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தனிப்படை வட்ட வழங்கள் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் உள்ள ஆதவன் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் தனிப்படை  அலுவலர் ஜெயச்சந்திரன், துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் குமார், காட்டூர் போலீசார் உதவியுடன் காட்டூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஆதவன் அரிசி ஆலையில் நேற்றுமுன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் 15 டன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து பஞ்செட்டியில் உள்ள நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், ஆதவன் அரிசி ஆலை உரிமையாளரிடம் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள், காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி தொகுதியில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.  இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Related Stories: