ஏடிசி பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி சேதம்: வாகனங்கள் சென்று வருவதில் சிரமம்

ஊட்டி, செப். 21:  நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி  வருகிறது. இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள்  உள்ளிட்ட அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி நகரின்  முக்கிய சாலையாக எட்டின்ஸ் சாலை உள்ளது. இச்சாலை வழியாகவே அரசு பஸ்கள்  உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இச்சாலை நகராட்சி  கட்டுபாட்டில் உள்ளது.

இச்சாலையில் கூடிய சேரிங்கிராஸ் துவங்கி  ஏ.டி.சி., வழியாக பஸ் நிலையம் வரை பல இடங்களில் குண்டும் குழியுமாக  காட்சியளிக்கிறது. இதுதவிர சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை  தொட்டிகளின் மூடிகள் சேதமடைந்து காட்சியளிக்கிறது. குறிப்பாக ஏடிசி பகுதியில் பாம்பேகேசில் செல்லும் சாலை சந்திப்பு அருகே சாலையின் நடுவே உள்ள  பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ள நிலையில் அதன் அருகில் தடுப்பு  வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு  வருகிறது.

மேலும் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிப்பதுடன், அடிக்கடி  போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே எட்டின்ஸ் சாலையில் உள்ள  பழுதடைந்த பாதாள சாக்கடை மூடிகளை சீரமைப்பதுடன், சாலையையும் செப்பனிட  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வாடகை வீட்டில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் கைது: 3 அழகிகள் மீட்பு மேட்டுப்பாளையம், செப். 21: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை குந்தா காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்துவதுபோல இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து போலீசார் இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த பெண் புரோக்கர் பரிமளா (36) என்பவரை கைது செய்தனர். அங்குள்ள அறையில் விபசாரத்திற்காக அடைத்து வைத்திருந்த 28, 33, 24, வயதுள்ள 3 அழகிகளை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். புரோக்கர் பரிமளாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: