பிரபல யூ-டியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை போலீஸ் வழக்கு

கோவை, செப்.21:  கோவை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 14ம் தேதி டிடிஎப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு எம்.டி.எஸ். பேக்கரி அருகே பைக்கில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும்,

மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக, போத்தனூர் காவல் நிலையத்தில் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: