கோவை குளக்கரைகளில் எல்லைமீறும் காதல்ஜோடிகள்

கோவை செப். 21:  கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் உக்கடம், பெரியகுளம் வாலாங்குளம் பகுதியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்கா, ரேஸ்கோர்ஸ் நடைபாதை பூங்காக்களில் போலீசார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். ஜோடியாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்த நபர்களை அழைத்து போலீசார் பல்வேறு விவரங்களை கேட்டனர். நாங்க இங்கு உட்கார்ந்து பேசக்கூடாதா?, லவ் பண்ண கூடாதா? சார் என காதல் ஜோடிகள் போலீசாரிடம் கேட்டனர். தனியாக வந்த பெண்களிடம் உங்களை யாராவது தொந்தரவு செய்தார்களா? இங்கு ஏதாவது இடையூறு இருக்கிறதா? என போலீசார் விசாரித்தனர்.‌

யாராவது தடையை மீறி பிராங்க் வீடியோ எடுக்கிறார்களா?, கஞ்சா மற்றும் போதை மாத்திரை கும்பல் நடமாட்டம் இருக்கிறதா? சமூக விரோத செயல்கள் ஏதாவது நடக்கிறதா? எனவும் போலீசார் ஆய்வு செய்தனர். பூங்காக்களில் அத்துமீறி ஜோடியாக அமர்ந்து காதல் லீலையில் ஈடுபட்ட 25 ஜோடிகளை போலீசார் பிடித்து விசாரித்தனர். பொதுமக்கள், சிறுவர்கள் இருக்கும் இடங்களில் அத்துமீறி நடக்க கூடாது. முத்தமிட்டு, தொட்டு விளையாட கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். காதல் ஜோடிகள் மட்டுமின்றி கள்ள காதலர்கள் சிலரும் பூங்காவில் சீண்டி கொண்டிருந்த போது சிக்கினர்.

இவர்களிடமும் போலீசார் விசாரித்தனர். சிலர் போலீசாரை கண்டதும் பூங்காவில் இருந்து நைசாக நழுவி சென்றனர். பல்வேறு இடங்களில் மது போதையில் சுற்றிய சிலரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பூங்காக்களில் போலீசார் திடீர் சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: