தேசிய அளவிலான சிலம்பம் போட்டி மாணவனுக்கு முதல் பரிசு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் இயங்கிவரும் ஸ்ரீநிகேதன் பாடசாலை சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர் டபுள்யூ.பி. இம்மானுவேல் தேசியஅளவில் நடைபெற்ற சிலம் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை, அம்பத்தூரில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நலச் சங்கம் இணைந்து 3வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுதர்சன் தலைமை வகித்தார். வடசென்னை காவல்துறை இணை ஆணையர் ஆர்.வி.இரம்யா பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் சிலம்பத் திறமையை வெளிப்படுத்தினர். இறுதிப்போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த ஸ்ரீநிகேதன் பாடசாலை சி.பி.எஸ்.இ பள்ளியில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர் டபுள்யூ.பி. இம்மானுவேல் மிக சிறப்பாக சிலம்பம் விளையாடி தேசிய அளவில் முதல் பரிசினை தட்டிச் சென்றார். முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்த மாணவர் டபுள்யூ.பி. இம்மானுவேலுவை பள்ளியின் நிறுவன தலைவர் எ.பன்னீர்செல்வம், தாளாளர் ப.விஷ்ணுசரண், இயக்குனர்கள் பரணிதரன், அருளரசு, பள்ளியின் முதல்வர் எம்.கிரிஜா, துணை முதல்வர் ஹேமலதா, தலைமை ஆசிரியை ஜூலி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துகூறி இனிப்பு வழங்கி பாராட்டினர்.

Related Stories: