கஞ்சா விற்ற 5 பேர் கைது: திருச்சி போலீசார் அதிரடி

திருச்சி, செப். 20: திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருச்சி தீரன் நகர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டிபுதூர் ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, போலீசார் நேற்று முன்தினம் தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்ற சோமரசம்பேட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தீரன்நகர் அருகே கஞ்சா விற்றதாக மயிலாடுதுறையை சேர்ந்த வினோத்குமார்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதைப்போல், பாலக்கரை ரேஷன் கடை பகுதியில் கஞ்சா விற்ற பிலாலுதின்(27) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போல், திருச்சி இபி ரோடு பகுதியில் கஞ்சா விற்ற ஹீபர் ரோட்டை சேர்ந்த முத்துகருப்பன்(27) என்பவரை கோட்டை எஸ்ஐ சட்டநாதன் கைது செய்து, வாலிபரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காந்தி மார்க்கெட் பத்ரகாளி கோயில் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(22) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: